உங்கள் குழந்தைகள் இந்த ஆபத்தில் சிக்கும் முன் மீட்டுவிடுங்கள்..!! பெற்றோர்களே இனியாவது கவனமா இருங்க..!!
இந்த நவீன காலக்கட்டத்தில் பெற்றோர்கள் வழக்கமாக தங்கள் குழந்தையை நாள் முழுவதும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, வீடியோ கேம் போன்ற கேட்ஜட்களுடன் விளையாடுவதாக புகார் கூறுகிறார்கள். ஆனால், ஒரு குழந்தையை கேஜெட்டுக்கு அடிமையாக்குவதற்குப் பின்னால் உங்களுக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு. உங்களது சில பழக்கங்கள் குழந்தையை கேஜெட்களுக்கு அடிமையாக்குகின்றன.
பெரும்பாலும் சிறு குழந்தைகள் எளிதில் சலிப்படைகிறார்கள், பின்னர் பெற்றோர்கள் அவர்களை அமைதிப்படுத்த தங்களது செல்போனை கொடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் மொபைலில் விளையாடுகிறார்கள். இதனால் அவர்கள் அடம் பிடிக்காமல், நிதானமாக இருந்தாலும், படிப்படியாக இது குழந்தைகளுக்கு ஒரு போதை போல் ஆகிறது.
இப்போதெல்லாம் உங்கள் மொபைல் போனிலேயே அனைத்தும் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளுக்கு புதிய விஷயங்களை கற்பிக்க பெற்றோர்கள் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வழியில், குழந்தைகளுக்கு பல விஷயங்களைக் காட்ட முடியும், ஆனால் கற்பித்தல் என்ற பெயரில், நீங்கள் அவர்களுக்கு மணி கணக்கில் மொபைல் கொடுக்க முடியாது என்பதையும் மறக்க வேண்டாம்.
அவர்களுக்கு சுவாரஸ்யமான கதைகளை கூறுவது, உங்களின் குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக கூறுவது, அவர்களுடன் ஓடி, ஆடி, பாடி விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் அவர்களின் கவனத்தை மொபைல் விளையாட்டுகளில் இருந்து திசை திருப்பலாம்.