முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விராட் கோலியின் தாய் கவலைக்கிடமா..? சகோதரர் வெளியிட்ட பதிவு..!!

02:12 PM Jan 31, 2024 IST | 1newsnationuser6
Advertisement

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்திருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி பிப்.2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.

Advertisement

கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால், ஒரு சில ஊடகங்கள் விராட் கோலியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அதன் காரணமாகவே விராட் கோலி விலகி இருக்கிறார் என்றும் செய்திகளை வெளியிட்டிருந்திருந்தனர். இந்நிலையில், விராட் கோலியின் தாய் சரோஜ் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவலுக்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவில், “என் அம்மாவின் உடல்நிலை தொடர்பாக பரவி வரும் தகவல்களில் உண்மையில்லை. அவர் நலமாகத்தான் இருக்கிறார். மக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
இங்கிலாந்து அணிஇந்தியாபிசிசிஐவிராட் கோலி
Advertisement
Next Article