அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா..? திடீரென பறந்த உத்தரவு..!! ஷாக்கிங் நியூஸ்..!!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், 1,040 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் என 2 வகையான பதவி உயர்வுகள் வழங்கப்படுவது வழக்கம். அதில் முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றிருந்தாலும், அடுத்த பதவி உயர்வு பெறுவதற்கு சில ஆண்டுகள் தாமதமாகும். இதனை தடுப்பதற்காக ஆசிரியர்கள் தங்களின் பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பு அடிப்படையில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வருகின்றனர்.
இந்த புதிய முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள முதுநிலை ஆசிரியர்களின் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து 1,040 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.