நிலம் மற்றும் வீடு இலவசமாக வழங்கியும் இந்த தீவில் குடியேற விரும்பாத மக்கள்..! என்ன காரணம்.!?
அன்றைய காலகட்டம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை தங்களுக்கென தனி வீடு மற்றும் நிலம் வாங்குவது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் பல வசதிகள் நிறைந்த நகரம் போன்ற பகுதிகளிலும், ஒரு சிலர் அமைதியான சூழ்நிலை நிறைந்த கிராமம் போன்ற பகுதிகளிலும் வீடுகளை கட்டுவதற்கு ஆசைப்படுவார்கள்.
இது போன்ற நிலையில் அமைதியான சுற்றுச்சூழல் இருக்கும் பகுதியில் வீடும், நிலமும் இலவசமாக வழங்கி மக்களை வரவேற்கும் அரசாங்கத்தினை பற்றி கேள்வி பட்டு உள்ளீர்களா? ஆம் இந்த தீவிற்கு சென்றால் குடியுரிமை வழங்கி அங்கேயே வீடும், நிலமும் இலவசமாக வழங்கப்படும்.
தென் பசிபிக் பெருங்கடல்களில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றுதான் பிட்கன் தீவு. இந்த தீவுகளில் மொத்தமாகவே 50 நபர்கள் தான் வாழ்ந்து வருகின்றனர். தீவின் வளர்ச்சியையும், மக்கள் தொகையையும் பெருக்கும் விதத்தில் அந்த பகுதி அரசாங்கம் பிட்கன் தீவில் வாழ விரும்பும் மக்களுக்கு இப்படி ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
ஆனால் இப்படி அறிவித்தும் 2015 இல் இருந்து இன்று வரை ஒரே ஒரு நபரிடமிருந்து தான் விண்ணப்ப படிவம் பெறப்பட்டுள்ளதாம். இதற்கு காரணம் என்னவெனில் பிட்கன் தீவில் வாழும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து யாரும் அங்கு வாழ்வதற்கு முயற்சி செய்யவில்லை.
மேலும் பிட்கன் தீவு மக்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், தீவின் கலைப் பொருட்கள், அங்கு வசிக்கும் மக்களின் முத்திரைகள் போன்றவற்றை விற்று தான் பணத்தை சம்பாதிக்கின்றனர். சுற்றுலா பகுதியான பிட்கன் தீவில் அடிப்படை வசதிகளான கடைகள், மருத்துவமனைகள், நூலகம், உடற்பயிற்சி கூடம் போன்றவைகள் இருந்தாலும் அதிகமான அமைதியான சூழல் மற்றும் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமே மக்கள் இங்கு வந்து குடியேற விரும்பவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.