For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”காலேஜ்ல ஒரே அசிங்கமா போச்சு”..!! ”நான் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்”..!! நடிகை ஸ்வேதா உருக்கம்..!!

02:56 PM Dec 23, 2023 IST | 1newsnationuser6
”காலேஜ்ல ஒரே அசிங்கமா போச்சு”     ”நான் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்”     நடிகை ஸ்வேதா உருக்கம்
Advertisement

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்வேதா. பின்னர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து, கனா காணும் காலங்கள், ஒரு கல்லூரியின் கதை உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

Advertisement

இந்நிலையில், தன்னுடைய கடந்த கால கசப்பான சம்பவங்களை யூடியூப் சேனல் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார் ஸ்வேதா. ”எல்லாருமே நான் மீடியால இருக்கிறதால என்ன தப்பா பேசினாங்க. காலேஜ்ல கூட எல்லாருமே அசிங்கமான வார்த்தையால என்ன திட்டினாங்க. எனக்கு அப்போ அதுக்கான அர்த்தம் தெரியல. எனக்கு காலேஜ் போகவே விருப்பமில்லை. அம்மா அப்பா கிட்ட போய் சொல்லிடன்.

ஒரு நாள் நான் காலேஜ் போறன். காலேஜ்ல இருக்கிற சீனியர்ஸ் என்ன பார்த்து வழமையை மாதிரியே கெட்ட வார்த்தையால திட்டினாங்க. எனக்கு எங்க இருந்து தைரியம் வந்திச்சோ தெரியல. நான் அவங்க முன்னாடி போய் உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்களா எனக்கு சாப்பாடு தாரிங்க? உங்களோட தங்கச்சிய இப்பிடி பேசுவீங்களானு கேட்டன். அதுக்கு அப்றமா மன்னிப்பு கேட்டு எல்லாரும் எனக்கு ஆதரவா தான் பேச தொடங்கினாங்க” என்றார்.

Tags :
Advertisement