”நான் குடிச்சிட்டு அப்படித்தான் பண்ணுவேன்”..!! போதையில் தந்தைக்கு குறிவைத்த மகன்..!! குறுக்கே வந்த அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!
செங்கல்பட்டு மாவட்டம் குமாரவாடி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கு செல்வம் (40), நாகராஜ் (33) என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில், நாகராஜ் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினமும் இரவு வீட்டுக்கு வரும்போது போதையில் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
நாகராஜ் அவ்வப்போது செல்வத்திடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக செல்வம் மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வராத நாகராஜ், அதிக மது போதையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் செல்வத்திற்கும் நாகராஜருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அவரது தந்தை நீலகண்டன் தடுக்க சென்றுள்ளார். இதனால், போதையில் ஆத்திரமடைந்த நாகராஜ் தந்தையை தாக்க முயன்ற நிலையில் நாகராஜ் செல்வத்தை அருகில் இருந்த கத்தியை எடுத்து மார்பு பகுதியில் சரமாரியாக தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த செல்வம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சம்பவம் அறிந்து வந்த படாளம் போலீசார் நாகராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு கூறுகையில், “மது போதையில் நாகராஜ் தொடர்ந்து எந்தவித வேலைக்கும் செல்லாமல் வீட்டிற்கும் பணம் கொடுக்காமல் சண்டை போட்டு வந்துள்ளார். இருப்பவர்கள் நாகராஜன் தட்டி கேட்டாலும் அவர்களை தாக்குவது அவர்களிடம் சண்டை போடுவது என தொடர்ந்து, பிரச்சனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த தம்பியை தட்டி கேட்ட அண்ணனை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.