For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’கையில் செல்போன் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா’..? ஐகோர்ட் கிளை நீதிபதி காட்டம்..!!

08:16 AM Jan 19, 2024 IST | 1newsnationuser6
’கையில் செல்போன் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா’    ஐகோர்ட் கிளை நீதிபதி காட்டம்
Advertisement

கையில் ஒரு செல்போன் இருந்தால் சோஷியல் மீடியாவில் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. செல்போன் இல்லாதவர்களே பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அனைவரது கையிலும் ஆறாம் விரலை போல ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளங்களில் முன் பின் தெரியாதவர்களிடம் கூட ஸ்மார்ட் போன்கள் மூலமாக அறிமுகம் கிடைக்கிறது. யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக எல்லாரும் பார்க்கும் படி வீடியோவை பதிவிட முடியும். இதேபோல் மற்றவர்கள் போடும் வீடியோக்களுக்கும் நாம் கருத்துக்களை பதிவிட முடியும்.

இதனை ஒருசிலர் தவறான வழிகளிலும் பயன்படுத்துகின்றனர். அரசியல் தலைவர்களை அவதூறாக பேசுவதையும், அவதூறான கருத்துக்களை பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தான் இப்படி அமைச்சர்கள், தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர் மீதான வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, “கையில் ஒரு செல்போன் இருந்தால் சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவர் மீது அவதூறு வழக்குப்பதியப்பட்டது. இதற்கு ஜாமீன் கோரி விஜில் ஜோன்ஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது முன் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி விஜில் ஜோன்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நீதிபதி தண்டபானி கூறுகையில், “கையில் ஒரு செல்போன் இருந்தால் சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா?.. சமூக வலைத்தளங்கள் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துவிட்டு பின்னர் இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன் என்று பதிவிடுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். எனவே, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் போன்றோர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்றார். தொடர்ந்து அவதூறு கருத்து பதிவிட்டவரை கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Tags :
Advertisement