”செய்யவில்லை என்றால் செய்யவில்லை என்றுதானே சொல்ல முடியும்”..!! பேரவையில் சபாநாயகருடன் காரசார விவாதம்..!!
இந்த ஆண்டின் இறுதி சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. இதில் உரையாற்றிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
சட்டப்பேரவை விதிகளின்படி, கடைசி சட்டசபை கூட்டம் நடந்து முடிந்ததில் இருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் அவை கூட வேண்டும். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 10 நாட்கள் அவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று அவைக்கூட்டம் மீண்டும் தொடங்கியது. இன்றும், நாளையும் கூட்டம் நடைபெறுகிறது. இன்று அவை கூடியதும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனையடுத்து, கேள்வி நேரம் தொடங்கியது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன், தன்னுடைய தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பினார். அதாவது, "கடந்த 4 ஆண்டுகளில் என்னுடைய பன்ருட்டி தொகுதியில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் மனு ஒன்றை கொடுத்திருந்தேன். அதில், தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் குறித்து கோரிக்கை வைத்திருந்தேன்.
அமைச்சரும் நடவடிக்கை எடுத்து துறைக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இப்பணி பாதியிலேயே நின்றிருக்கிறது. என்னுடைய தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சகம் சார்பில் இதுவரை எந்த நற்பணிகளும் நடைபெறவில்லை" என்று கூறியிருந்தார். இதற்கு உடனே குறிப்பிட்ட அவை தலைவர் அப்பாவு, "கேள்வி நேரம் என்பது கேள்விக்கானது மட்டுமே, குற்றச்சாட்டுகளுக்கானது அல்ல. எனுவே, இந்த குற்றச்சாட்டை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடலாம்" என்று கூறினார்.
உடனே பதிலளித்த வேல்முருகன், "செய்யவில்லை என்றால் செய்யவில்லை என்றுதானே சொல்ல முடியும்?" என்று கூறி தனது உரையை தொடங்கினார். சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் வேல்முருகனும், அவை தலைவரும் மோதிக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.60,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!