உடனே இந்த செயலிகளை டெலிட் செய்தால் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்..!! இல்லையென்றால் சிக்கலில் மாட்டிப்பீங்க..!!
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் 15 செயலிகளை தங்கம் மொபைலில் இருந்து டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
McAfee எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில், போலியான கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பது தெரியவந்தது. இந்த செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்தால், இது நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி வைப்பதாக McAfee நிறுவனம் எச்சரித்துள்ளார்.
மேலும், உலகளில் போலியான செயலிகளை டவுன்லோட் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதாம். கடன் செயலிகள் பெயரில் தான் பெரும் மோசடிகள் நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் வழங்கும் செயலிகளை ஒருவர் பதிவிறக்கம் செய்யும்போது ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள். இந்த தகவல்களை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு உங்களிடம் இருந்து பணத்தை திருடுவார்கள்.
போலி கடன் செயலிகள்
Préstamo Rápido-Credit Easy
ได้บาทง่ายๆ-สินเชื่อด่วน
RupiahKilat-Dana cair
ยืมอย่างมีความสุข – เงินกู้
RapidFinance
PrêtPourVous
Huayna Money
Préstamo Seguro-Rápido, seguro
IPréstamos: Rápido
เงินมีความสุข – สินเชื่อด่วน
KreditKu-Uang Online
Dana Kilat-Pinjaman kecil
Cash Loan-Vay tiền
ConseguirSol-Dinero Rápido
ÉcoPrêt Prêt En Ligne
மேற்குறிப்பிடப்பட்டுள்ள, போலி செயலிகளை ஒருவரது போனில் பதிவிறக்கம் செய்யும்போது கால் ஹிஸ்டரி, மெசேஜ்கள், கேமரா, மைக்ரோஃபோன் உள்ளிட்டவைகளை அணுகும் அனுமதியை கொடுக்கின்றனர். மேலும், அவசர தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக அதன் பின்விளைவுகளை மக்கள் புரிந்து கொள்ளாமல், அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டு பணத்தை இழந்து தவிக்கின்றனர்.
இந்தியாவில் சமீப காலமாகவே ஆன்லைன் சம்பந்தப்பட்ட நிதி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் பல செயலிகள் போலியாக இருப்பதால், மக்கள் கவனமுடன் கையாள வேண்டும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
Read More : 2025இல் ஏலியன்களுடன் நேரடி தொடர்பு, அட்டாக் செய்யும் வெட்டுக்கிளிகள்..!! பஞ்சத்தால் அழியப்போகும் மக்கள்..!!