For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அப்போது எனக்கு 18 வயசு’..!! ’மயக்க மருந்து கொடுத்து இயக்குநர் தப்பா நடந்துக்கிட்டாரு’..!! கங்கனா ரனாவத் பகீர் தகவல்..!!

01:34 PM Dec 12, 2023 IST | 1newsnationuser6
’அப்போது எனக்கு 18 வயசு’     ’மயக்க மருந்து கொடுத்து இயக்குநர் தப்பா நடந்துக்கிட்டாரு’     கங்கனா ரனாவத் பகீர் தகவல்
Advertisement

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் முதன் முதலில் அனுராக் பாசு என்பவர் இயக்கத்தில் கேங்ஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், கங்கனா ரனாவத்தின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Advertisement

இது போன்ற நிலையில் கங்கன ரனாவத் தன் முதல் படத்தின் இயக்குனர் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "என் முதல் படத்தின் இயக்குனரை நான் குருவாக கருதினேன். முதல் படத்தில் நடிக்கும் போது எனக்கு 18 வயது தான் ஆனது. ஆனால், இயக்குனர் அனுராதா பாசு போதையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் மயக்கத்தில் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
Advertisement