முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்களே முகத்தில் அதிகமாக முடி வளர்கிறதா.! இப்படி பேஸ் பேக் செய்து போட்டு பாருங்க..!

01:00 PM Feb 14, 2024 IST | 1newsnationuser5
Advertisement

ஒரு சில பெண்களுக்கு தைராய்டு போன்ற உடல்நல பிரச்சினை காரணமாகவும், ஹார்மோன்களின் காரணமாகவும் முகத்தில் தேவையற்ற ரோமங்கள் வளரும். இதனால் பல பெண்களும் தன்னம்பிக்கை குறைவாக இருந்து வருகின்றனர். இதற்கு பியூட்டி பாரலர்களில் பல மணி நேரம் செலவிட்டாலும் மீண்டும் இந்த ரோமம் வளர்ந்து விடுகிறது என்று பெண்களுக்கு கவலையாகவே இருந்து வருகிறது. இது போன்ற நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த அதிகப்படியான ரோமங்களை எப்படி நீக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்

Advertisement

மஞ்சள் பேஸ் பேக் - கஸ்தூரி மஞ்சள் பொடியில் பால் அல்லது பாலாடையை கலந்து முகத்தில் தினமும் இரவில் தேய்த்து வர வேண்டும். மஞ்சளில் ஆண்டி பயாடிக் பண்புகளும், பாலாடையில் கொழுப்பு சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் இது முகத்தில் இறந்த செல்களை நீக்கி தேவையற்ற ரோமங்களை உதிர செய்கிறது.
ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு பேஸ் பேக் - கடலை மாவை, தேன் மற்றும் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலந்து தினமும் 10 நிமிடத்திற்கு முகத்தில் ஃபேஸ் பேக் போன்று போட்டு வந்தால் முகத்தில் உள்ள ரோமங்கள் தானாகவே உதிர்ந்து சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.

முட்டையின் வெள்ளை கரு- முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை முகத்தில் நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். இது முகத்தில் காய்ந்து சருமம் சுருக்கமாகும். அந்த நேரத்தில் இதை முகத்தில் இருந்து மெதுவாக உரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு உரிக்கும் போது முகத்தில் உள்ள ரோமங்களும் சேர்ந்து கொண்டு வரும்.

பப்பாளி மற்றும் மஞ்சள் மாஸ்க் பப்பாளியை சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து மஞ்சள் தூளுடன் கலந்து முகத்தில் தேய்த்து வர சருமம் பொலிவடைந்து அதிகப்படியான ரோமங்கள் நீங்கும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை - எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதில் சர்க்கரையை தடவி முகத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்க்கும் போது முகத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும். இதுபோன்ற ஒரு சில பொருட்களை வைத்தே முகத்தில் உள்ள தேவையற்ற ரோமத்தை எளிதாக நீக்கலாம்.

Tags :
BeautyFacial hairWomens
Advertisement
Next Article