உயிருக்கே ஆபத்தாகும் சிறுநீர் பாதை தொற்று.. வரவிடாமல் தடுப்பது எப்படி.!?
பொதுவாக சிறுநீர் பாதை தொற்று என்பது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தை விட குளிர் காலத்தில் அதிகமாக சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கு காரணம் போதுமான அளவு தண்ணீர் உடலில் இல்லாததும் ஒரு காரணமாகும். மேலும் சிறுநீர் பாதை தொற்று பாதித்தால் உடலில் என்ன நிகழும் என்பதையும், சிறுநீர் பாதை தொற்று வரவிடாமல் தடுப்பது எப்படி என்பதை குறித்தும் பார்க்கலாம்?
ஆண்களை விட பெண்களுக்குத்தான் சிறுநீர் பாதை தொற்று அதிகமாக பாதித்து வந்தது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது மிகவும் எரிச்சலுடனும், வலியுடனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஒரு சில நேரங்களில் சிறுநீர் பாதை தொற்று சிறுநீரகங்களை செயலிழக்க வைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தடுக்கும் வழிமுறைகள்
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும். வெளியே வாங்கிய உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். முயன்ற அளவு பொது கழிவறைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் சுத்தமான கழிவறைகளையே உபயோகப்படுத்த வேண்டும்.
சுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும். மேலும் கொழுப்பு நிறைந்த மீன்கள், பால் பொருட்கள் வைட்டமின் டி மாத்திரைகள் போதுமான அளவு சூரிய ஒளி நம் உடலில் படும்படி பாத்து கொள்ள வேண்டும் இது போன்ற ஒரு சில விஷயங்களை பண்பற்றுவதன் மூலம் சிறுநீர் பாதை தொற்றை தடுக்கலாம்.