வீடே கோயிலை போல மணக்க இந்த மாதிரி விளக்கேற்றி பாருங்க.! அசந்துடுவீங்க.!?
அன்றாடம் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுவது நம் மனதிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் அமைதியை தருவதோடு வீட்டிலும் நேர்மறையான எண்ணங்கள் பெருகும். ஆதி உருவான கடவுளை தீயில் காண்பது தான் தீபம் என்பதாகும். தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் நேர்மறையான எண்ணங்கள் பெருகி தனம், ஆரோக்கியம், நன்மை, சுபம், நல்லபுத்தி போன்றவற்றையும் தருகிறது.
மேலும் என்ன தான் வீட்டில் விளக்கேற்றி தினமும் வழிபட்டு வந்தாலும் கோயிலுக்கு சென்று வழிபடுவது போல் இருக்காது. இதற்கு காரணம் அங்கு நிலவும் அமைதியும், நல்ல வாசனையும் தான். இவ்வாறு கோயில் போலவே வீடே மணக்கும்படி எப்படி வீட்டிலேயே விளக்கு ஏற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
விளக்கேற்ற தேவையான பொருட்கள்
ரோஸ் வாட்டர், எசன்ஸ் ஆயில், அலுமினியம் பேப்பர், விளக்கு திரி, கண்ணாடி டம்ளர்,
முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் பாதியளவு ரோஸ் வாட்டர் ஊற்றி அதில் எஸ்சென்ஸ் ஆயில் கலக்க வேண்டும். பின்பு ஒரு அலுமினிய பாயில் பேப்பரை கண்ணாடி டம்ளரின் உள்பக்கத்தின் அளவிற்கு சிறிய வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த பேப்பரின் நடுவில் விளக்கு திரியை வைக்கும் அளவிற்கு சிறியதாக ஓட்டை போட்டு விளக்கு திரியை அலுமினிய பேப்பரின் நடுவில் சொருக வேண்டும். பின்பு அந்த அலுமினிய பேப்பரை ரோஸ் வாட்டர் நிரம்பிய கண்ணாடி டம்ளரில் வைத்து விளக்கேற்றினால் வீடே கோயில் போல மணமாக இருக்கும்.