Karthigai Deepa Appam : கார்த்திகை தீப ஸ்பெஷல் செட்டிநாடு கந்தர் அப்பம் செய்வது எப்படி?
தமிழகத்தில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்று. இது கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடுகிறார்கள்.. கார்த்திகை என்றாலே அப்பம்தான் ஸ்பெஷல். அப்பத்தில் பல்வேறு வகை உள்ளது. அதில் செட்டிநாடு கந்தர் அப்பம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
கந்தர் அப்பம் செய்ய தேவையான பொருட்கள்;
பச்சரிசி-2 கப்.
உளுத்தம் பருப்பு-1/4 கப்.
வெந்தயம்-சிறிதளவு.
துருவிய தேங்காய்-3 தேக்கரண்டி.
ஏலக்காய்-1 தேக்கரண்டி.
வெல்லம்-1/2 கப்.
கருப்பு எள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
கந்தர் அப்பம் செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பவுலில் 2 கப் பச்சரிசி, ¼ கப் உளுத்தம் பருப்பு, கொஞ்சம் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அரைத்த மாவுடன் 3 தேக்கரண்டி துருவிய தேங்காய், 1 ½ கப் வெல்லம், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறாமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான். சுவையான செட்டிநாடு கந்தர் அப்பம் தயார்.
Read more ; உஷார்!!! ஓடும் டாக்ஸியில் ஆடையை கழற்றி, வாலிபர் செய்த காரியம்..