பூஜை அறையில் இந்த பொருட்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது.! ஏன் தெரியுமா.!?
பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். கோயிலுக்கு சென்றால் மனதில் ஒருவித அமைதியான உணர்வு ஏற்படும். அதே உணர்வு நம் வீட்டின் பூஜை அறையிலும் இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவது உண்டு. பூஜை அறையில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் எந்த பொருளை வைக்க கூடாது என்பதையும் குறித்து விளக்கமாக பார்க்கலாம்?
பொதுவாக எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகர் சிலை தான் இருக்கும். விநாயகரை வணங்கி விட்டு தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்பதற்காக தான் விநாயகர் சிலை முதலில் அமைந்துள்ளது. இதைப்போலவே நம் வீட்டிலும் முதலில் விநாயகர் படத்தை வைத்துவிட்டு பின்பாக முருகன் வள்ளி தெய்வானை, லட்சுமி, சரஸ்வதி சிவபெருமான் பார்வதி இணைந்த படங்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். நம் குலதெய்வ படம் வைத்து வழிபடுவது குடும்பத்தை பிரச்சனைகளிலிருந்து காக்கும்.
பூஜை அறையில் அதிகமாக கடவுளின் படத்தை வைத்து நிரப்புவதற்கு பதில், கண்ணுக்கு நிறைவை தரும் முக்கிய கடவுளின் படத்தை மட்டுமே வைக்கலாம். குறிப்பாக உக்கிர தெய்வமான காளி போன்ற கடவுளின் படங்களை வைப்பது வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடுவது மன அமைதியை ஏற்படுத்தும்.
முக்கியமாக பூஜை அறையில் பயன்படுத்தும் பொருட்களை வீட்டில் வேறு எந்த இடங்களிலும் வைக்க கூடாது. பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். ஒரு சிலர் வீட்டில் எள் விளக்கு, எலுமிச்சை விளக்கு போன்றவற்றை ஏற்றி வழிபடுகின்றனர். ஆனால் கோயில்களில் மட்டுமே இத்தகைய விளக்குகளை ஏற்ற வேண்டும். காய்ந்த பூக்கள், எரிந்த குச்சி, பாதி எரிந்த விளக்கு திரி போன்றவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். அப்படியே பூஜை அறையில் போட்டு வைத்திருப்பது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.