நோயற்ற வாழ்வை தரும் ஒரு சில வீட்டு வைத்திய முறைகள்.. என்னென்ன தெரியுமா.?!
நாம் அன்றாடம் உண்ணும் ஒரு சில உணவுகளில் கிடைக்கும் சத்துக்கள் மூலம் உடலில் ஏற்படும் நோயை தடுக்கலாம். பொதுவாக பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றில் பலவிதமான சத்துக்களான வைட்டமின்கள், நார்ச்சத்து, புரோட்டீன்கள், இரும்பு சத்து போன்றவை இருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. நம் சமையல்கட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களின் மூலம் நோயை எப்படி தீர்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
1. சின்ன வெங்காயம் - அனைவரது வீட்டிலும் இருக்கும் சின்ன வெங்காயம் பச்சையாக அடிக்கடி உண்பதன் மூலம் இருமல், சளி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
2. சுண்டைக்காய் - உடலில் இரும்புச் சத்தை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வழிவகுக்கும்.
3. கேழ்வரகு - பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து அடிக்கடி குறைவாகும். இதற்காக தினமும் உணவில் கேழ்வரகு சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
4. வேப்பம்பூ - வேப்பம் பூவை பலரது வீட்டிலும் ரசம் வைத்து சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் தொற்று கிருமிகளை நீக்கும்.
5. தேன் - ஒரு ஸ்பூன் தேனுடன், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் வரட்டு இருமல் உடனடியாக நீங்கும்.
6. மணத்தக்காளி - இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் ஆசனவாய் வெடிப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
7. எறும்புகள் மற்றும் ஒரு சில பூச்சிகள் கடித்து வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் வெங்காயத்தை நறுக்கி தேய்த்து விடலாம். இதனால் வலி உடனடியாக குறையும்.
8. உடல் எடை அதிகரிக்க எள் மற்றும் எள்ளில் செய்த உணவு பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.
9. வயிற்று உப்புசம், வயிற்று வலி, அஜீரணம் போன்றவை உடனடியாக சரியாக சாப்பாடு வடித்த நீரில் மஞ்சள் தூள், உப்பு கலந்து குடித்து வரலாம்.