முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் நியூஸ்...! உயர் கல்வி பயில உதவித்தொகை ரூ.36 லட்சமாக உயர்வு...! தமிழக அரசு அரசாணை...!

06:10 AM Nov 03, 2023 IST | 1newsnationuser2
Advertisement

ஆதிதிராவிடர் நலத்துறை - அயல் நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .8 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ .36 இலட்சமும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .12 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ.24 இலட்சமும் வழங்க புதிய நெறிமுறைகள் உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அயல்நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சமாக நிர்ணயித்து ஆணைகள் வெளியிடப்பட்டன. அதன்படி. அயல்நாடுகளில் உயர்கல்வி பயில ஒரு மாணவருக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 36.00 இலட்சம் வீதம் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஆணையிடப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் தொடர்பான சட்டமன்ற கூட்டத் தொடரின் போது மாண்புமிகு ஆதிதிராவிடர் நல அமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன் படி, அயல்நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள வருமான உச்சவரம்பு இரண்டு அடுக்குகளை கொண்டதாக மாற்றியமைக்கப்படும் எனவும், முதலடுக்கில் ரூ.8.00 இலட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமான உச்சவரம்பு உள்ள மாணாக்கருக்கு அவர் பயிலும் படிப்பின் அடிப்படையில் ஆண்டிற்கு ரூ.36.00 இலட்சத்திற்கு மிகாமலும், இரண்டாவது அடுக்கில் ரூ.8.00 இலட்சத்திற்கு மேல் ரூ.12.00 இலட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமான உச்ச வரம்புள்ள மாணாக்கருக்கு ரூ.24.00 இலட்சத்திற்கு மிகாமலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
36 lakhsForeign studiesScholarshiptn government
Advertisement
Next Article