5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!! வரும் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு வார்னிங்..!!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு – வட மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : “ஒரே நாடு, ஒரே தேர்தல்”..!! டிச.16ஆம் தேதி மக்களவையில் தாக்கலாகிறது மசோதா..?