முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கனமழை முதல் மிக கனமழை..!! எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

A red alert has been issued for some districts of Tamil Nadu today and tomorrow in response to Cyclone Fenchal, which has formed in the Bay of Bengal.
03:57 PM Nov 30, 2024 IST | Chella
Advertisement

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த இரு நாட்களுமே புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுச்சேரியில் இருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 110 கிமீ தொலைவிலும், நாகையில் இருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

Advertisement

இந்த புயல் வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, இன்று (நவ.30) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (டிச.1) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், தருமபுரி, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”கர்ப்பிணிகளே முன்கூட்டியே மருத்துவமனையில் அட்மிட் ஆகுங்க”..!! ”தாமதிக்காதீங்க”..!! மருத்துவத்துறை அவசர அறிவிப்பு..!!

Tags :
கனமழைசென்னை வானிலை ஆய்வு மையம்ரெட் அலர்ட்
Advertisement
Next Article