”கூட்டணி கட்சிக்காக எந்த வேஷம் வேண்டுமானாலும் போடுவார்”..!! நீங்கெல்லாம் இதை பத்தி பேசலாமா..? அட்டாக் செய்த அண்ணாமலை..!!
திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளின் பட்டியல் இன்னும் போய்க் கொண்டே இருக்கும் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில், அவருக்கு என்னென்ன அவமரியாதையை ஏற்படுத்தினார்கள் என்பதை லோக்சபாவில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அம்பலப்படுத்தினர்.
அதன் பிறகு, இண்டியா கூட்டணி தங்கள் கடந்த கால வரலாறு நாட்டு மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவறுகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டவை, காங்கிரஸ் மீது 'வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்' என்று பூசி மெழுகுகிறார் திருமாவளவன். கடந்த 2012இல் அம்பேத்கரை அவமதித்ததற்காக காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அவரே போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டார். திருமாவளவன் ஆவேசம் தவறானது. தனது கூட்டணிக் கட்சிகளுக்காக, எந்த வேஷம் வேண்டுமானாலும் போடத் தயாராகிவிட்டார்.
தன்னைச் சார்ந்திருக்கும் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவருக்கு கிடையாது. கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து, திமுகவுக்கு எதிராக ஒரு போராட்டம் கூட அவர் நடத்தியதில்லை. கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூக மக்களுக்கு, தங்கள் அரசு இழைத்த கொடுமைகளை மூடிமறைக்கும் முயற்சியாக திமுகவினரும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக, மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. அம்பேத்கரின் பெருமையைப் போற்றும்படியாக பலவற்றைச் செய்திருக்க முடியும் என்ற நிலையில், அம்பேத்கரின் மரியாதைக்காக என்ன செய்தார்கள்? இன்று எத்தனை நாடகங்களை அரங்கேற்றினாலும், காங்கிரஸும், திமுகவும் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும், அம்பேத்கருக்குச் செய்த அவமரியாதையையும், பட்டியல் சமூக மக்களுக்கு அவர்கள் செய்த களங்கங்களின் வரலாற்றையும் அழிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : சென்னைக்கு மீண்டும் தீவிர மழை எச்சரிக்கை..!! டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து..!! வானிலை மையம் வார்னிங்..!!