’அவர் என் மகன் தானா’..? சந்தேகப்பட்டு DNA டெஸ்ட் எடுத்த நடிகர் அப்பாஸ்..!!
நடிகர் அப்பாஸ் 90-களில் சினிமாவுக்குள் வந்து 2000-களின் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தார். அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமலுடன் பம்மல் கே சம்பந்தம், ரஜினியுடன் படையப்பா என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக பெண் ரசிகைகளை அதிகம் கொண்டிருந்த அவர், சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீரென பட வாய்ப்புகள் குறைந்துபோக ஆள் காணாமல் போனார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் அப்பாஸ். மிர்சா அப்பாஸ் அலி என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ஃபெரோஸ் கானுக்கு ஒருவகையில் சொந்தம் ஆவார். சினிமாவின் ரத்தம் அப்பாஸுக்குள் ஓடியதாலோ என்னவோ அவருக்கு மாடலிங் மேல் ஆசை வந்தது. அதன்படி 1994இல் Face of Bangalore என்ற டைட்டிலை தட்டி சென்றார். இதனையடுத்து அவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் ஏற்பட சினிமா வாய்ப்பு அவரை தேடி வந்தது. முதன்முதலாக தமிழில் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படம் மெகா ஹிட்டானது.
இவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார். மேலும் பெண் ரசிகைகளையும் ஏராளமாக கொண்டிருந்தார் அவர். ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. கடைசியாக 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சக்கள்ளம் படத்தில் நடித்தார். அதன் பிறகு வெளிநாட்டுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவது உள்ளிட்ட வேலைகளை செய்துவந்த அவர் தற்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்.
மேலும் பேட்டிகளையும் அளித்துவரும் அவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில், அவர், "எனது மூத்த மகன் ரொம்பவே அமைதியானவர். நான் அவர் வயதில் இருக்கும்போது ஏகப்பட்ட கூத்துக்களையும், கலாட்டாக்களையும் செய்திருக்கிறேன். ஆனால், அவரோ அப்படி கிடையாது. அதனால் அவர் என்னுடைய மகன்தானா என்று ஆச்சரியமாகவும் இருந்தது சந்தேகமாகவும் இருந்தது. எனவே, டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்து அவர் என்னுடைய மகன்தான் என்று சொன்னார்கள்" என்றார்.