முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்களுக்கு இன்னும் ரூ.1,000 உரிமைத்தொகை வரவில்லையா..? அப்படினா உடனே இதை பண்ணுங்க..!!

07:40 AM Nov 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், மாதம்தோறும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், நவ.9ஆம் தேதியே சிலரது வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பலருக்கும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது.

இதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் முதலில் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டை பயன்படுத்தி money statement மூலமாகவும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை தகுதி இருந்தும் ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றால் இ சேவை மையம் மூலமாக அதற்கான உரிய தகவல்களை நீங்கள் பெறலாம். இல்லையென்றால் 1100 என்ற எண்ணை அழைத்து உரிமை தொகை தொடர்பாக புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags :
தமிழ்நாடு அரசுபெண்கள்மகளிர் உரிமைத்தொகைவங்கிக் கணக்கு
Advertisement
Next Article