பெரும் சோகம்..!! உலகின் No.1 மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் சாலை விபத்தில் பலி..!!
உலகின் நெ.1 மாரத்தான் வீரரான கெல்வின் கிப்டம், கார் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலக மாரத்தான் சாதனையாளரான கெல்வின் கிப்டம் தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹக்கிசிமானா உடன், நேற்றைய சாலை விபத்தில் பலியானார். இது குறித்து கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ உறுதி செய்த பிறகே வெளியுலகிற்கு இந்த செய்தி தெரிய வந்தது.
24 வயதான கிப்டம் சிகாகோ மாரத்தான் போட்டியில் 2 மணி நேரம் 35 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். மேலும் லண்டன் மாரத்தானை 2 மணி நேரம் ஒரு நிமிடம் 25 வினாடிகளில் கடந்து, முன்னதாக உலக சாதனை புரிந்தார். 2022 வாலென்சியா மராத்தானில், கெல்வின் கிப்டம் 2 மணிநேரம் ஒரு நிமிடம் 53 வினாடிகளில் கடந்து, வரலாற்றில் மிக வேகமான அறிமுக மராத்தான் சாதனை என்பதை படைத்தார்.
இவற்றில் சிகாகோ சாதனை, மாரத்தான் ஓட்டங்களில் இதுவரையிலான உலக சாதனையாக உள்ளது. அந்த வகையில் உலகின் நெ.1 மாரத்தான் சாதனையாளராக கிப்டம் அங்கீகரிக்கப்பட்டார். அடுத்த நிகழ்வாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் ரோட்டர்டாம் மாரத்தானில் அவர் பங்கேற்க இருந்தார். இது உலக சாதனை படைத்த பிறகு அவரது முதல் நிகழ்வாக காத்திருந்ததில், விளையாட்டு உலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்பை உருவாக்கி இருந்தது. இதற்கிடையே, கிப்டமின் அகால மரண சேதி சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உலுக்கி உள்ளது.