முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள்"..!! "போதும்டா சாமி என்று ஓடி வந்துட்டேன்"..!! திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..!!

Government employees and teachers are murderous sinners.
10:37 AM Nov 23, 2024 IST | Chella
Advertisement

தஞ்சையில் அதிமுகவின் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ”அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள், அவர்கள் குடும்பத்தினரின் 80 லட்சம் வாக்குகளால் தான் நாம் தோற்றோம் என பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

Advertisement

இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ”கூட்டணி கட்சிகள் ரூ.100 கோடி ரூபாய் கேட்கிறார்கள் என்று தான் பேசியது உண்மைதான். எடப்பாடி பழனிசாமி எங்களை கூப்பிட்டு பேசிவிட்டா, போகும் கூட்டங்களில் கூட்டணி குறித்து எதுவும் பேசி குழப்பிட வேண்டாம். மற்ற விஷயங்களை மட்டும் பேசுங்கள். அமைதியாக இருங்கள். மீதியெல்லாம் நாங்கள் பேசிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், போன தேர்தலில் நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். ஒரு தபால் ஓட்டு கூட எனக்கு விழவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் எல்லாம் கொலைகார பாவிகள். சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றிபெற்றதே போதும்டா சாமி என்று ஓடி வந்துட்டேன்" என்று பேசியுள்ளார்.

Read More : மணிப்பூருக்கு மேலும் 10,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும் மத்திய அரசு..!! இதுவரை 258 பேர் உயிரிழப்பு..!!

Tags :
அதிமுகஅரசு ஊழியர்கள்ஆசிரியர்கள்திண்டுக்கல் சீனிவாசன்
Advertisement
Next Article