For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கந்த சஷ்டி திருவிழா!… திருச்செந்தூரில் தரிசன கட்டணம் ரூ.2000 ஆக உயர்வு!… பக்தர்கள் அதிர்ச்சி!

08:46 AM Nov 14, 2023 IST | 1newsnationuser3
கந்த சஷ்டி திருவிழா … திருச்செந்தூரில் தரிசன கட்டணம் ரூ 2000 ஆக உயர்வு … பக்தர்கள் அதிர்ச்சி
Advertisement

திருச்செந்தூர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

Advertisement

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது. காலை 9 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி மாலையில் கடற்கரையில் நடக்கிறது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூரில் குழும துவங்கிவிட்டனர். பாதுகாப்பிற்காக 2500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்நிலையில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு இதுவரை நபர் ஒருவருக்கு 500 மற்றும் 2000 என இருந்த அபிஷேக தரிசன கட்டணம் தற்போது 3 ஆயிரம் ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் 2000 ரூபாயாகவும், விரைவு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்தது ரூ.1000 ஆக உயர்வு, 2022ல் நிர்ணயித்த சிறப்பு தரிசன கட்டணத்தை திடீரென இன்று உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
Advertisement