பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்..!! எப்படி விண்ணப்பித்து வாங்குவது..? இந்த திட்டம் பற்றி தெரியுமா..?
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்காக மத்திய அரசு உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தை கொண்டுவந்தது. இத்திட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.
என்னென்ன தகுதிகள்..?
# வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியும்.
# விண்ணப்பிக்கும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, அவருக்கு இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்பு எதுவும் இல்லாதிருக்க வேண்டும்.
# விண்ணப்பதாரர் இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். இவ்வளவு தகுதியும் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
# மேலும், பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் உள்ளவர்களும் இந்த திட்டத்தில் பலன்பெறலாம்.
# நகராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர் வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சாதி சான்றிதழ், முகவரி ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை கட்டாயம் தேவை.
# www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று, உஜ்வாலா 2.0 திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த படிவத்தில் கேட்டுள்ள பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
# இப்போது, அடையாள ஆவணங்கள் அனைத்தையும் அப்லோடு செய்ய வேண்டும். இறுதியில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.