”அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!
புயல் மற்றும் கனமழையால் அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஃபெஞ்சல்’ புயலாக உருவானது. இந்தப் புயல் இன்று (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை புறநகர் மற்றும் அனைத்து பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இன்று (நவ.30) முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, ஃபென்ஜால் புயல் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் முக.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்தபடியே மழை முன்னேற்பாடுகள் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.