For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் நடைபெறும் காட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்- மாநகராட்சி அறிவிப்பு..!

04:52 PM Dec 02, 2023 IST | 1Newsnation_Admin
சென்னையில் நடைபெறும் காட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்  மாநகராட்சி அறிவிப்பு
Advertisement

சென்னையில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளை புயல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisement

சென்னையில் பல பகுதிகளில் அடுக்குமாடி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மாநகராட்சி சார்பாக கட்டுமான நிறுவனங்களுக்கான அமைப்பு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் சென்னையில் கட்டுமான பணிகள் நடந்து வரும் இடங்களில் புயல் காரணமாக தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளது. இதை கட்டுமான பணிகள் மட்டும் கட்டுமான நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி புயல் கரையை கடக்கும் நேரத்தில் வாடா தமிழகத்தில் 80 கி.மீ. முதல் 90 கி.மீ வரை காற்றின் வேக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள், எனவே இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கட்டுமான நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே போன்று கட்டுமான பணிகளுக்கு மேற்கொள்ளக்கூடிய கட்டுமான பொருட்களை காற்றில் பறக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்பான இடகியாத்தில் வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 510 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கு திசையில் 710 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement