கடுமையான காற்று மாசுபாட்டில் இருந்து நம் நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்.!
இன்று மக்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சனைகளில் முதன்மையானதாக இருப்பது காற்று மாசுபாடு. பெருகி வரும் நகரமயமாக்கல், தொழிற்சாலைகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அதிகரிக்கும் எண்ணிக்கை ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு காற்றும் மாசுபடுகிறது. இதில் மிக முக்கியமாக பாதிக்கப்படுவது நமது நுரையீரல். இதுபோன்ற சூழ்நிலைகளில் நமது நுரையீரலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் போட்டு பார்ப்போம்.
மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக இருப்பதோடு அழற்சிக்கு எதிரான பண்புகளையும் கொண்டிருக்கிறது. மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் அழற்சிக்கு எதிராக போராடக்கூடிய பண்புகளை கொண்டது. நம் உணவில் மஞ்சள் சேர்ப்பதன் மூலம் நுரையீரலில் ஏற்படும் அழற்சியை தவிர்த்து நமது சுவாசம் மண்டலம் மேம்பட உதவுகிறது. காற்று மாசுபாட்டில் இருந்து நம்முடைய நுரையீரலை காத்துக் கொண்ட உதவும் மற்றொரு முக்கியமான உணவு பெர்ரி பழங்கள். இந்த பெர்ரி வகை பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்சிடென்ட்களை கொண்டிருக்கிறது. இவை செல் செய்தமடைவதை தடுப்பதோடு காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிக்கப்படுவதையும் தடுக்கிறது.
கீரைகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த ஒரு உணவாகும். இவை நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது. இவற்றை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாசுபாட்டால் ஏற்படும் தீங்கிலிருந்து நம் உடலை காத்துக் கொள்ளலாம். பூண்டு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகம் கொண்ட ஒரு உணவு பொருள். இது உடலில் அலர்ஜிக்கு எதிராக செயல்படும் பண்புகளை கொண்டிருக்கிறது . இவற்றை உணவில் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சுவாச மண்டலம் சீராக இயங்குவதோடு மாசுபாட்டால் ஏற்படும் தீமைகளிலிருந்து உடலை காக்க உதவும்.
இஞ்சி நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று. இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. மேலும் நுரையீரலில் சளி படர்வதையும் எதிர்த்து போராடுகிறது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் உணவுகளில் மிக முக்கியமானது கிரீன் டீ. இதில் இருக்கும் பாலிஃபினால்கள் சுவாச மண்டல செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.