For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம்... மத்திய அமைச்சர் தகவல்..!

Fertilizer at low prices for farmers across the country
06:09 PM Nov 30, 2024 IST | Vignesh
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம்    மத்திய அமைச்சர் தகவல்
Advertisement

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டிஏபி சீராக கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தேவைக்கேற்ப என்பிஎஸ் மானிய விகிதங்களுக்கு மேல் டிஏபி சிறப்பு தொகுப்புகளை அரசு வழங்குகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரசாயனம், உரத் துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல்; பாஸ்பேடிக் - பொட்டாசியம் (பி & கே) உரங்களில், ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் (என்பிஎஸ்) திட்டத்தின் கீழ், முக்கிய உரங்கள், மூலப்பொருட்களின் சர்வதேச விலைகளைக் கருத்தில் கொண்டு மானியம் நிர்ணயிக்கப்படுகிறது. 2024 கரீப் பருவத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு டிஏபி மானியம் ரூ. 21676 ஆகவும், 2024-25 ரபி பருவத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு டிஏபி மானியம் ரூ. 21911 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டிஏபி சீராக கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தேவைக்கேற்ப என்பிஎஸ் மானிய விகிதங்களுக்கு மேல் டிஏபி சிறப்பு தொகுப்புகளை அரசு வழங்குகிறது. உற்பத்திச் செலவைப் பொருட்படுத்தாமல், அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் (எம். ஆர். பி) விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்படுகிறது.

யூரியாவைப் பொறுத்தவரை, யூரியா துறையில் புதிய முதலீட்டை எளிதாக்குவதற்கும், யூரியா துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்கும் புதிய முதலீட்டுக் கொள்கையை (என்ஐபி) அரசு அறிவித்தது. இதன் கீழ் மொத்தம் 6 புதிய யூரியா ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சி மூலம் அமைக்கப்பட்ட 4 யூரியா நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்ட 2 யூரியா நிறுவனங்களும் அடங்கும்.

இந்த ஆலைகள் யூரியா உற்பத்தித் திறனை 76.2 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளன. இதன் மூலம் மொத்த உள்நாட்டு யூரியா உற்பத்தி திறன் 2014-15 ஆம் ஆண்டில் 207.54 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் தற்போநு அது தற்போது 283.74 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும், உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தற்போதுள்ள 25 எரிவாயு அடிப்படையிலான யூரியா ஆலைகளுக்கான புதிய யூரியா கொள்கையை 2015 மே 25 அன்று அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைகள் 2014-15 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 225 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த யூரியா உற்பத்தியை 2023-24 ஆம் ஆண்டில் 314.07 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்க உதவியது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement