முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விவசாயிகளே..!! 16-வது தவணைத் தொகைக்கு வெயிட்டிங்கா..? ரூ.2,000 பெற இன்றே கடைசி..!!

10:40 AM Jan 31, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பிஎம் கிசான் திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நீண்ட நாட்களாகவே மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விவசாயிகள் விடுத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருகிறதாம். அந்த வகையில், இனி ரூ.8,000 வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இதுவரை மொத்தம் 15 தவணைகளாக ரூ.2,000 பெற்ற விவசாயிகள் 16-வது தவணைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

16-வது தவணைத் தொகையை பெற வேண்டுமானால், பிஎம் கிசான் வெப்சைட்டில் விவசாயிகள் தங்களது ஆதார் நம்பரை உறுதி செய்ய வேண்டும். அதற்கு இன்று (ஜனவரி 31) கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ஆதார் நம்பர்தவணைத் தொகைமத்திய அரசுவிவசாயிகள்
Advertisement
Next Article