"நிர்வாணமா ரோட்டுல நின்னேன்" பிரபல நடிகர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..
1991-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் சரவணன். 1991-ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 1991 - 2003 ஆம் ஆண்டுகள் வரை நாயகனாக 26 திரைப்படங்கள் நடித்துள்ளார். பின்னர் திரைத்துறையை விட்டு விலகிய இவர், 2007-ம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை அளித்தது. இந்த படத்தில் கார்த்தியின் சித்தப்பா செவ்வாழை எனும் வேடத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார். அதன்பின், குணச்சித்திரம், காமெடி கலந்த வில்லன் என பல வேடங்களிலும் நடிக்க துவங்கினார். இதற்காக ரஜினியே இவரை அழைத்து பாராட்டினார். தீவிர ரஜினி ரசிகரான இவர், சேலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தார்.
சூர்யன் சந்திரன், அபிராமி, பார்வதி என்னை பாரடி, செவத்த பொண்ணு, தாய் மனசு என பல ஹிட் படங்களை கொடுத்த இவர், விஸ்வநாத், சந்தோஷம் ஆகிய படங்களை அவரே தயாரித்து நடித்தார். ஆனால் அந்த படங்கள் இவருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது. இதனால் நிறைய பணத்தையும், சொத்தையும் இழந்த இவர், விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது வாழ்க்கையில் நடந்த பல சோக சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர், ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறு போது ‘ரெண்டு படம் தயாரிச்சேன். அதனால 3 கோடி மதிப்புல இருந்த என்னோட எல்லா சொத்துக்களையும் இழந்துட்டேன். போட்டுக்க துணி கூட இல்லாம என் அண்ணன், தம்பிங்க என்னொட டிரெஸ்ஸ கூட தூக்கிட்டு ஓடிட்டானுங்க. அதனால நான் நிர்வாணம் ஆக்கப்பட்டு நடுரோட்டில் நின்னேன். இப்ப திரும்பி வந்திருக்கேன் என்றால் அது கடவுளோட அருள்தான்’ என கூறியுள்ளார்.