"விழுந்து சாவுறதுன்னா பஸ்ல விழுந்து சாவு" - சமூக வலைதளத்தில் வைரலான முன்னாள் பிரதமரின் மருமகள் வீடியோ.!
இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மருமகள் சாலையில் நின்று ஒருவருடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவ கௌடா தற்போது ஜனதா தல கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் 1996-97 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார். கர்நாடக மாநில முதல்வர் பதவியிலும் வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகன் ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா. இவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த ஒரு நபர் இவரது காரில் மோதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பவானி ரேவண்ணா சாலையில் தனது காரை நிறுத்தி அந்த நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
மேலும் விழுந்து சாவது என்றால் பஸ்ஸிற்கு அடியில் சென்று சாவு என்று தெரிவித்த அவர் தனது கார் ஒன்றரை கோடி மதிப்புள்ளது எனவும் ஆத்திரத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.