”உடற்பயிற்சியே செய்தாலும் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இதயநோய் வரும்”..!! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
உடற்பயிற்சி செய்தாலும், நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளன.
மருத்துவர் எஸிம் அஜுபோ பாஸ்டனைச் சேர்ந்தவர் இதவியல் நிபுணர். இவரது ஆய்வில் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக டயட், உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் நாள் முழுவதும் அமர்ந்திருப்பது இதயநோய்களை உண்டாக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். நாம் உடல் ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்வதில்லை என்றாலும் கூட, நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையாவது குறைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பான ஆய்வில் 90,000 பேரிடம் ஆக்செலோமீட்டர்கள் பொருத்தி அவர்கள் அமர்ந்திருக்கும் போதும், மற்ற வேலைகள் செய்யும்போதும் ஏற்படும் உடலியல் மாற்றங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடலுக்கு நல்லதல்ல என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. ஆனால், என்னென்ன பிரச்சனைகள் எதனால் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாக அறிய முடியவில்லை.
மேலும், ஒரு நாளில் எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பது மோசமானது என்பதை விளக்கும், வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. இதனால் இந்த தளத்தில் இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதற்கட்ட ஆய்வுகளில் தோராயமாக 10 மணிநேரத்துக்கும் மேல் அமர்ந்திருப்பது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். மனித உடல் நீண்டநேரம் நின்றபடி வேலை செய்யும் வகையில் பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.
உங்கள் இதயமும் இதயமண்டலும் நிற்கும்போதுதான் சிறப்பாக செயல்படும். குடலும் செரிமான மண்டலமும் அவ்வாறே செயல்படுகிறது. நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும்போது உங்கள் ஒட்டுமொத்த ஆற்றலும், உடலின் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறை உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். நீண்ட நேரம் அமர்வது இதயநோய், நீரிழிவுநோய், கழுத்து, தோல்பட்டை வலி, கணுக்கால் வீக்கம், கால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read More : இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே முந்துங்கள்..!!