'அதானி கைக்கு வந்தது எஸ்ஸார் டிரான்ஸ்கோ..!!' நெக்ஸ்ட் பிளான் என்ன?
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் தொடர்ந்து அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதைத் தாண்டி போட்டி நிறுவனங்களையும், இத்துறை சார்ந்த நிறுவனங்களையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது. இந்த கையகப்படுத்தல் காரணமாக, அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கவனம் பெற்று வருகின்றன.
கடந்த மே 15 ஆம் தேதியோடு, எஸ்ஸார் டிரான்ஸ்கோ லிமிடெட் நிறுவனத்தின் 100% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்திற்கு கீழ் உள்ள பரிமாற்ற பரப்பளவு 21182 ckt கிலோமீட்டர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த கையகப்படுத்தல் அதானி குழுமத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய படிக்கல்லாக அமைந்துள்ளது.