முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குறிப்பாக வெள்ளி கொலுசை ஏன் காலில் அணிய வேண்டும்..? இவ்வளவு நன்மைகளா..?

07:50 AM Nov 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் இருக்கும். அந்த வகையில், கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.

Advertisement

எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு, வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என்று என்றைக்காவது சிந்தித்துள்ளீர்களா..? காலில் அணியும் ஆபரணம் தங்கத்தில் இருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால், வெள்ளியை காலில் அணிந்தால் பல்வேறு மருத்துவ பலன்கள் கிடைக்கும். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. வெள்ளி கொலுசு அணிவதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி கொலுசு அணிவது பாதங்களை அழகாக்கும். தற்காலத்தில் பெண்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், குழந்தையின்மை, கால் வலி என பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆனால், பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் இது போன்ற பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். வெள்ளி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனால் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். வெள்ளிக் கொலுசு அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உண்மையில் வெள்ளி கொலுசு அணிவதால் எலும்புகள் வலுவடையும். வெள்ளி கொலுசு கால்களைத் தொடும் போது, இந்த உலோக உறுப்பு தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

வெள்ளி கொலுசு அணிவதால் பெண்களின் ஹார்மோன் அளவை சமன் செய்ய முடியும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பல மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்துவதாகவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் நன்மை பயக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால், பெண்கள் பொதுவாக கால் வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்க முடியும்.

Tags :
அறிவியல் காரணம்வெள்ளி கொலுசு
Advertisement
Next Article