For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாத வெடிப்பினால் தர்மசங்கடமாக இருக்கிறதா..? அலட்சியம் வேண்டாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!!

Embarrassed by cracked feet? Don't be indifferent.. Doctors alert!!
07:10 AM Nov 29, 2024 IST | Mari Thangam
பாத வெடிப்பினால் தர்மசங்கடமாக இருக்கிறதா    அலட்சியம் வேண்டாம்   மருத்துவர்கள் எச்சரிக்கை
Advertisement

இன்று பல பெண்கள் தங்களுடைய முகத்திற்கு கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை தங்களுடைய கால்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பெடிக்யூர், மெனிக்யூர் போன்ற கால்களின் அழகை மேம்படுத்தக்கூடிய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பலர் சந்திக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக குதிகால் வெடிப்பு அமைகிறது.

Advertisement

கால்களை சுற்றி இருக்கும் தோலில் விரிசல்கள் ஏற்பட்டு வறண்டு காணப்படுவது பாத வெடிப்பு எனப்படுகிறது. இது நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அசௌகரியம், வலி அல்லது மோசமான சூழ்நிலைகளில் இரத்த கசிவை கூட ஏற்படுத்தலாம். ஆகவே பாத வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கு உதவும் குறிப்புகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பாத வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டால் பாதங்களில் வறட்சி காரணமாக வெடிப்பு ஏற்படுகிறது. இதேபோல் உடல் எடை அதிகரிப்பால், அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்பு உண்டாகிறது. பாத வெடிப்பு, ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது. முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள க்ரீம்களை வாங்கிப் பூசும் நாம், நமது முழு எடையையும் தாங்கும் நமது பாதத்தை கவனிப்பது இல்லை. பாதத் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால் தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறு. நமது முகத்திற்கு காட்டும் அதே அக்கறையை நாம் பாதத்திற்கும் காட்ட வேண்டியது அவசியம்.

குளிர்காலம் வந்தாலே சரும வறட்சி காரணமாக பாதத்தின் குதிகால் சருமம் வெடிக்கத் தொடங்கும். வெடிப்புள்ள குதிகாலில் தூசி மற்றும் அழுக்கு படிந்து தொற்று ஏற்பட்டு நடப்பதே சிரமமாக மாறிவிடும். இதற்க்கு, குளிர்காலத்தில் எப்போதும் கால் முழுவதையும் மறைக்கும் பாதணிகளை அணிவது நல்லது. முகத்திற்கு கிரீம்கள் பயன்படுத்துவது போல், கை, கால்களுக்கும் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்து வேண்டும். மேலும், அவ்வப்போது, உங்கள் பாதங்களை ஸ்க்ரப் செய்ய வேண்டும். தினமும் தூங்கும் முன், கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைத்து, பின்னர் சோப்பு பயன்படுத்தி கால்களை சுத்தப்படுத்த வேண்டும். பின் கால்களை உலர வைத்து, மாய்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை தடவவும். பின் சாக்ஸ் அணிந்துக்கொள்ளுங்கள்.

இப்படி நாம் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாக நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் ஆயில், கற்றாழை க்ரீம் போன்றவற்றையும் மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read more ; திடீரென குலுங்கிய ஜம்மு காஷ்மீர்.. வீதிக்கு ஓடிய பொதுமக்கள்..!! நிலநடுக்கத்தால் பீதி

Tags :
Advertisement