For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானில் நடப்பது என்ன.? 37 மணி நேரம் மேலாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை.! தாமதமாகும் தேர்தல் முடிவு பரபரப்பு தகவல்கள்.!

12:02 PM Feb 10, 2024 IST | 1newsnationuser4
பாகிஸ்தானில் நடப்பது என்ன   37 மணி நேரம் மேலாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை   தாமதமாகும் தேர்தல் முடிவு பரபரப்பு தகவல்கள்
Advertisement

பாகிஸ்தான் நாட்டின் பொதுத்தேர்தல் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆகியும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. அந்நாட்டில் வாக்குப்பதிவு தேதியை நெருங்கி வந்த சூழ்நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் இம்ரான் கான் மீது பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Advertisement

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 3 வெவ்வேறு வழக்குகளில் இம்ரான் கானுக்கு 31 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவரது மனைவி 21 வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். இம்ரான் கான் கட்சியும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை இல்லா அவரது கட்சியின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். மேலும் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு பலூஜிஸ்தான் மாகாணத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் உடல் சிதறி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய கடினமான சூழ்நிலையில் பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கிய நிலையில் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது இன்னும் தாமதமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 36 மணி நேரங்களுக்கும் மேலாக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

266 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 82 இடங்களில் முன்னணி வகிப்பதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் 40 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த முறையும் கூட்டணி அரசே அமையும் என்று பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. மேலும் 25 சதவீத வாக்குகள் எண்ணப்படவில்லை. இதனால் வெற்றியாளர்கள் யார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் ஆங்காங்கே கலவரங்களும் நடந்து வருகிறது. இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இணையதள சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாவதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையை விரைந்து முடித்து தேர்தல் முடிவுகளை விரைவாக அறிவிக்க தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் முடிவுகள் பற்றிய வதந்திகள் பரவாமல் இருப்பதை தடுக்க செல்போன்களின் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில் தேர்தல் முடிவுகள் தாமதமாவதால் அண்ணா நாட்டின் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Tags :
Advertisement