செவ்வாழைப் பழத்தை அதிகமா சாப்பிட்டா இத்தனை பிரச்சனை வருமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்...
பழங்கள் எப்பொழுதுமே நம் உடலுக்கு நல்லது தான். பொதுவாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழங்களை தான் சாப்பிட சொல்வார்கள். ஆனால், செவ்வாழை பழத்தை மட்டும் சாப்பிட்டால் சளி பிடிக்கும், அஜீரண கோளாறு ஏற்படும் என்று பல குறைகளை கூறுவார்கள். ஆனால் இது எதையும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கவில்லை. ஆனால், 2022ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, இந்த செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், ஒவ்வாமை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், செவ்வாழைப் பழத்தை அதிகம் சாப்பிட்டால், வாந்தி, வீக்கம், வாய்வு, குமட்டல் ஆகியவை ஏற்படும். என்ன தான் செவ்வாழை பழத்தில் இத்தனை பக்கவிளைவுகள் இருந்தாலும், அதனை அளவாக எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு நன்மையை தான் தரும்.
நம்மில் பலர், பழத்தை சாப்பிட்டு விட்டு உடனடியாக அந்த தோலை தூக்கி எரிந்து விடுவோம். அப்படி நாம் குப்பையில் வீசும் தோலில் அதிக சத்துக்கள் உள்ளது. அதனால் இந்த தோலை கீழே வீசாமல், அதை மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவலாம். இதனால் முகம் குளிர்ச்சி அடைந்து, பொலிவு பெறும். அது மட்டும் இல்லாமல், பருக்கள், மரு உள்ளிட்டவை வராமல் தடுக்கும். உங்களுக்கு தோலை அரைத்து பூசுவது பிடிக்கவில்லை என்றால், நீங்கள் இந்த தோலை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, முகத்தில் லேசாக மசாஜ் செய்யலாம்.. செவ்வாழை பழத்தின் தோலில், வைட்டமின்கள் A, B, C, மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளது. அதனால் இது சருமத்திலுள்ள கரும்புள்ளிகளை சுலபமாக நீக்கிவிடும்.
Read more: “2 1/2 சவரன் நகைய காணோங்க” பிரபல நடிகை அளித்த பரபரப்பு புகார்..