For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சமைக்க நேரமில்லையா.! ஈசியாக 5நிமிடத்தில் செய்யக்கூடிய முட்டை குழம்பு.! எப்படி செய்யலாம்.!?

06:18 AM Jan 21, 2024 IST | 1newsnationuser5
சமைக்க நேரமில்லையா   ஈசியாக 5நிமிடத்தில் செய்யக்கூடிய முட்டை குழம்பு   எப்படி செய்யலாம்
Advertisement

தற்போது பண்டிகைக்கான விடுமுறைகள் எல்லாம் முடிந்து குழந்தைகள் மறுபடியும் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் காலையிலேயே எழுந்து விரைவாக சமைத்து முடிப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. இதன்படி ஐந்தே நிமிடங்களில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக முட்டை குழம்பு செய்வது எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

தேவையான பொருட்கள்
முட்டை - 5, தக்காளி- 2, வெங்காயம் 2, பச்சை மிளகாய் -1, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு -1ஸ்பூன், பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி - கைப்பிடி அளவு, கரம் மசாலா -1 ஸ்பூன்

செய்முறை

முதலில் வெங்காயம் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்து வந்ததும் அதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பின்பு அதில் 5 முட்டைகளையும் உடைத்து ஊற்றி தீயை குறைத்து முட்டையை வேக விடவும். முட்டை வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை குழம்பு ரெடி.

Tags :
Advertisement