முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அலறி ஓடிய மக்கள்...! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...!

09:42 AM Jan 16, 2024 IST | 1newsnationuser2
Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு 6 ஆக பதிவாகியது. இதனால் லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல் ஆப்கானிஸ்தானிலும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி, டில்லி என்சிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.

Advertisement

ஜப்பான் நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்பட்டன.

Tags :
earthquakejammujammu kashmir
Advertisement
Next Article