வாகன ஓட்டிகளே..!! டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் இனி கவலைப்படாதீங்க..!! சூப்பர் வசதி..!!
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வாகன பதிவு தொடர்பாக, மொத்தம் 42 சேவைகளை தமிழக இணைய வழியில் பெறலாம் என்று தமிழ்நாடு அரசு கடந்தாண்டு அறிவித்தது. அந்த வகையில், போக்குவரத்து அலுவலகம் சென்று நீண்ட நேரம் வரிசையில் பொதுமக்கள் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்பதால் பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.
டிரைவிங் லைசென்ஸ் பெற்ற பிறகு, ஒரு விண்ணப்பதாரர் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பிறந்த தேதி சான்று, 10ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார், புகைப்படம் போன்றவை இதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களாகும். ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற்றுக்கொள்வது போலவே, டிரைவிங் லைசென்ஸில் திருத்தங்கள் ஏதாவது இருந்தாலும், செய்து கொள்ளலாம். அதேபோல, உங்களது டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
முதலில் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்ய வேண்டும். உங்கள் டிரைவிங் லைசென்ஸ் மிகவும் பழையதாகிவிட்டாலோ, அல்லது அது தெளிவாக தெரியாமலோ அல்லது கிழிந்துவிட்டாலோ, நீங்கள் அசல் பிரதியை நகல் எடுக்க வேண்டும். பிறகு, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான வழிமுறைகள் இதுதான்...
-- முதலில் போக்குவரத்து துறையின் வெப்சைட்டிற்கு சென்று, கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
-- அடுத்து, LLD படிவத்தை நிரப்பி, அதை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.
-- இதனுடன் உங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
-- இந்த படிவத்தையும், அனைத்து ஆவணங்களையும் ஆர்டிஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதை ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம். அப்படி சமர்ப்பிக்கும்போது, ஒரு ரசீது தரப்படும். அந்த ரசீதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.
-- ஆன்லைன் செயல்முறை முடிந்த அடுத்த 30 நாட்களுக்கு பிறகு, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.
-- இந்த டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸை, நீங்கள் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
-- இதற்கு, அசல் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். LLD படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து, துறை நிர்ணயித்த கட்டணத்தையும் அதனுடன் சேர்த்து கட்ட வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களில் டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் கிடைத்துவிடும்.