"மாடர்ன் ட்ரஸுக்கு இனி தடா."! அமலுக்கு வந்தது ஆடை கட்டுப்பாடு.! தஞ்சை பெரிய கோயிலில் அறிவிப்பு பலகை.!
தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் கோவில்களுக்கு வரும்போது குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்பது தொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த துவங்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக தஞ்சை பெரிய கோவிலில் இந்த நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சோழ மன்னர் ராஜ ராஜனார் கட்டப்பட்ட இந்த கோவில் தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை நகரில் அமைந்திருக்கும் இந்த பெரிய கோவிலில் தான் ஆடை கட்டுப்பாடு முதன் முதலில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இதன்படி கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் வேட்டி சட்டை மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வர வேண்டும் என்றும் பெண்கள் புடவை தாவணி மற்றும் துப்பட்டா உடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என்றும் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு பலகையையும் கோவில்வனாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை வைத்திருக்கிறது.
சமீபத்தில் பொது இடங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் தஞ்சை கோயிலில் இந்த ஆடை கட்டுப்பாடு தற்போது அமலுக்கு வந்திருக்கிறது.