தோசை விற்று மாதம் ரூ. 6 லட்சம் வருமானம்.. அப்போ வருமான வரி? விவாதத்தை தூண்டிய X பதிவு..!
இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு பதிவு பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
நவீன் கொப்பரம் என்ற X தள பயணர் ஒருவர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள தோசை வியாபாரி ஒரு நாளைக்கு ரூ.20,000 என்ற வீதத்தில் மாதம் ரூ.6 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதாகவும், செலவுகளை நீக்கிய பின்னர் ரூ.3 முதல் ரூ.3.5 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாகவும், இதற்காக இவர் எந்த வித வரியும் செலுத்தவில்லை என்றும் தனது X பதிவில் எழுதியுள்ளார். இவருடைய பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சம்பளம் வாங்கும் ஊழியர்கள் 10% வரை வரி செலுத்துகின்றனர். ஆனால் தனித்து தொழில் செய்பவர்கள் எந்தவித வரியும் செலுத்துவதில்லை. இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், "மற்றொரு நபர் இதுபோன்ற தெரு வியாபாரிகளுக்கு காப்பீடு கிடையாது. கார். வீடு. பைக் கடன்கள் பெறுவது இவர்களுக்கு கடினம். அதேபோல PF கிடையாது. உறுதியான வருமானமும் இல்லை. இவர்கள் ரூ.60,000 சம்பாதிக்கும் சாஃப்ட்வேர் பொறியாளரை விட அதிக ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். எனவே ஆங்கிலம் பேசும் ட்விட்டர் பயனர்கள் அவர்கள் வருமான வரி செலுத்துவதால் தான் நாடு இயங்குகிறது என்று நினைக்கக் கூடாது என்று பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு பயனர், "பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்ட போதும் சரி, யுபிஐ அறிமுகமான போதும் சரி பணம் பெரியளவில் ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்யப்படுவது குறைகிறது. அதேநேரம் யுபிஐ டேட்டா அரசிடம் இருப்பதால் அதை வைத்து சாலையோர வியாபாரிகளை வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வருவது எளிதாக இருக்கும். எனவே, அரசு இதை நான் செய்யும் என்று நினைத்தேன். ஆனால், அரசு அதுபோல எதுவும் செய்யவில்லை. இவர்கள் யாருமே வருமான வரி ரிட்டர்னை கூட தாக்கல் செய்வது இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
Read more : செக் புக் யூஸ் பண்றீங்களா? எழுதும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!!