குலதெய்வம் தோன்றியது எப்படி தெரியுமா..? மக்களே இந்த வழிபாட்டை மறந்துறாதீங்க..!!
குலதெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாக கூட இருக்கலாம். அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் என்றால், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது தான் குலதெய்வம். நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
வாழ்க்கையில் அதிகமாக கர்மவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போவது உண்டு. அத்தகையவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை தங்களுக்கு காட்டிருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் வைக்கக்கூடாது.
இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவுக்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். விரதம் மேற்கொள்ளும் இந்த 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக புலனடக்கம் தேவை. இப்படி செய்வதால் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி யார் மூலமாகவோ அல்லது கனவிலோ அறிய வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. இந்த வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்ய வேண்டும்.
Read More : விவசாயிகளே..!! ஆடுகளை வைத்து இப்படியும் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..!!