பிரிட்ஜின் சுவிட்சை ஆஃப் செய்யாமல் சுத்தம் செய்யாதீங்க..!! மின்சாரம் தாக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!
இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப்பொருட்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பிரிட்ஜில் வைத்து மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். வீட்டில் பிரிட்ஜை பயன்படுத்தும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் தான், பிரிட்ஜை சுத்தம் செய்த பெண்மணி, பிரிட்ஜின் மின் இணைப்பை துண்டிக்காமல் அப்படியே சுத்தம் செய்துள்ளார். இதனால், அவரை மின்சாரம் தாக்கி கீழே சுருண்டு விழுந்துள்ளார். குளிர்சாதன பெட்டியில் மின்சார வயர் கசிவு இருந்தாலும், ஈரப்பதம் காரணமாக மின்சாரத்தை கடத்தலாம். ஆகையால், பிரிட்ஜை சுத்தம் செய்ய நினைத்தால், ஸ்விட்சை ஆப் செய்து, அதனை பிளக் பாயிண்டில் இருந்து வெளியே எடுத்துவிட்டு பின் சுத்தம் செய்வது நல்லது. ஆனால், இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வெடிக்கும் பிரிட்ஜ்..?
பிரிட்ஜ் பின்புறம் உள்ள கேஸை கடத்த மெல்லிய பைப் லைன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவை நாம் பிரிட்ஜை நகர்த்தும் போதும் அசைக்கும் போதும் கீறல் விழுந்து கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போல் மாப்போட்டு தரையை துடைக்கும் போதும் கூட பிரிட்ஜில் பட்டு கம்பிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு நடக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் லீக் ஆகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதனால் பிரிட்ஜை கவனமாக கையாள வேண்டும். தினமும் பிரிட்ஜை குறைந்தபட்சம் 2 முறையாவது திறந்து மூட வேண்டும். நீண்ட நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டியது இருந்தால், பொருட்களை வெளியே வைத்து பிரிட்ஜை அமத்திவிட்டு, லேசாக திறந்த நிலையில் வைக்க வேண்டும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும்போது, 30 நிமிடம் ஓய்வு கொடுத்துவிட்டு கழட்ட வேண்டும். அதேபோல் அதனை ஆன் செய்யும் போது 30 நிமிடம் சீராக ஒரே இடத்தில் வைத்துவிட்டு ஆன் செய்ய வேண்டும்.