பெண்களுக்கு அதிகரித்து வரும் மார்பக புற்றுநோயின் ஆபத்து.! எவ்வாறு கண்டறியலாம்.!?
புற்று நோய்களில் பல்வேறு வகையான புற்று நோய்கள் உடல் உறுப்புகளை பாதித்தாலும், பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஆபத்து என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. மார்பக புற்றுநோயை சரிசெய்ய எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கபடாத காரணத்தினால் தற்போது வரை அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது.
இவ்வாறு பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் பாதித்தால் மார்பகத்தை முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடுவார்கள். இதனை மருத்துவத்துறையில் மேஸ்க்டோமி என்று அழைக்கபடுகிறது. மேலும் புற்று நோயின் தீவனத்தை பொருத்தும் நோயின் தன்மையைப் பொருத்தும் மார்பகத்தில் உள்ள கட்டி போன்ற திசுக்களை மட்டும் நீக்கலாமா அல்லது முழு மார்பகத்தையும் நீக்க வேண்டுமா என்பது மருத்துவர்களே முடிவெடுப்பார்கள்.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்: 15 நாட்களுக்கு ஒரு முறை பெண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். குறிப்பாக குளிக்கும் போது மேலாடையை கழட்டி விட்டு இடது மார்பகத்தை வலது கையாளும், வலது மார்பகத்தை இடது கையாலும் பிடித்து பார்க்க வேண்டும். இவ்வாறு பார்க்கும் போது கட்டி போன்ற ஏதாவது இருக்கிறதா அல்லது மார்பு காம்பிலிருந்து நீர் போன்று ஏதாவது வருகிறதா அல்லது நரம்புகள் சுருண்டு இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் மார்பக புற்று நோயை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சை தேவைப்படாது.