குளிர்காலத்தில் அதிகமாக வாட்டர் ஹீட்டர் யூஸ் பண்றீங்களா..? இனி இதை செய்தால் மின் கட்டணமே வராது..!!
தற்போது பெரும்பாலான வீடுகளில் வாட்டர் ஹீட்டரின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வாட்டர் ஹீட்டர் வந்த பிறகு வெந்நீர் வைத்து குளிப்பது எளிதாகி விட்டது. ஆனால், அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இது மின்சாரத்தில் இயங்குகிறது. முறையாக பராமரிக்கப்படவில்லை என்றால், சில ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது, குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை வழங்கும் அனைத்து பொருட்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்குகிறது.
ஹீட்டர்கள் மிகவும் விலை உயர்ந்தது மற்றும் அதிக மின்சாரம் செலவாகும். அத்தகைய சூழ்நிலையில், இந்த பெரிய மின் கட்டணத்தில் இருந்து விடுபட, வாட்டட் ஹீட்டர்களுக்கான சிறந்த விருப்பங்களில் ஒன்று சோலார் வாட்டர் ஹீட்டர் ஆகும். இது மின்சாரத்தை சேமிப்பது மட்டுமின்றி ஆற்றலையும் சேமிக்கிறது. சந்தையில் இந்த சோலார் ஹீட்டர்களின் விலை ரூ.15,000 முதல் ரூ.50,000 விலையில் கிடைக்கின்றன.
இந்த ஹீட்டர்கள், சூரிய சக்தியில் இயங்குவதால், மின் நுகர்வு மிகக் குறைவு. இதனால் 70 முதல் 80 சதவீதம் மின்சாரம் சேமிக்க முடியும். சோலார் ஹீட்டர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு சொந்தமான NEDA மூலம் வழங்கப்படுகிறது. இதன் கீழ் எஃப்.பி.சி சோலார் வாட்டர் ஹீட்டருக்கு 6,000 ரூபாயும், இடிசி வாட்டர் ஹீட்டருக்கு 5,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.