For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் குழந்தைகளை ஏன் தனியாக தூங்க வைக்க வேண்டும் தெரியுமா..? பெற்றோர்களே இந்த வயசு வரை தான் எல்லாம்..!!

08:55 AM May 03, 2024 IST | Chella
உங்கள் குழந்தைகளை ஏன் தனியாக தூங்க வைக்க வேண்டும் தெரியுமா    பெற்றோர்களே இந்த வயசு வரை தான் எல்லாம்
Advertisement

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான தூங்கும் முறை இருக்கும். சில குழந்தைகள் தலையணைகள், போர்வைகள் மற்றும் பொம்மைகளுடன் தூங்குவார்கள். இன்னும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தூங்கும் பழக்கத்தை வழக்கமாகவே வைத்திருப்பார்கள். இந்த பழக்கம் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் வரை சரி. நாட்கள் செல்ல செல்ல அவர்கள் பெரியவர்களாக வளரும்போது ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படும்.

Advertisement

ஏன், திடீரென குழந்தைகளை விட்டு வேரெங்காவது செல்லும் சூழல் ஏற்பட்டால் கூட மிக சிரமமாக தோன்றும். இப்படி இருக்கையில், குழந்தைகள் தனித்தனியாக அவ்வபோது தூங்குவது மிகவும் அவசியமாகும். இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகள் ஏன் தனியாக தூங்க பழக வேண்டும்..?

குழந்தைப் பருவத்தில், பெற்றோரிடம் அதிக பற்றுதல் இருக்கும். இந்த காரணத்திற்காக, அவருடன் தூங்குவது தவறல்ல. ஆனால், குழந்தைகள் வளரும்போது, ​​அவர்கள் தனியாக தூங்கப் பழக விரும்புகிறார்கள். சில நேரங்களில் குழந்தையே தனியாக தூங்க விரும்பினால் கூட பெற்றோர்கள் விடுவதில்லை. இது முற்றிலும் தவறானது. இப்படி தொடந்து செய்யும் பட்சத்தில் அக்குழந்தை எப்பொழுதும் தூங்குவதற்கு பெற்றோரை தேடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

குழந்தைகளை தனியாக தூங்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்..?

திடீரென உங்கள் பிள்ளையை தனியாக தூங்க வற்புறுத்தக் கூடாது. எந்த குழந்தையாக இருந்தாலும் திடீரென தனியாக இருக்கப் பழகி விடாது. அதற்கு முதல் படியாக அவர்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தனியாக தூங்க வையுங்கள். பின்னர் தனியாக தூங்கும் நாட்களை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளுங்கள். இதனைத் தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்கள் தனியாக தூங்குவதற்கு சிறிது பழகிக் கொள்வார்கள்.

தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் குழந்தைகளை ஃபிரஷ் அப் செய்து நைட் டிரெஸ் போட்டு விட்டு அவர்களை மெத்தையில் தூங்கும் நிலையில், படுக்கவைத்து போர்வைகளை போத்தி அருகில் அமர்ந்து நல்ல கதை ஒன்றை சொல்லுங்கள். பின்னர் விளக்குகளை அணைத்து விட்டு, குட்நைட் சொல்லிவிட்டு செல்லுங்கள். இவ்வாறு உங்கள் குழந்தைகள் தனியாக உறங்குவதை கான சிரமமாக இருக்கலாம். இன்றே இந்த வழக்கத்தை முறித்துக் கொள்ளலாம் எனத் தோன்றலாம். ஆனால், இவ்வாறாக செய்வது மிக முக்கியம். இப்படி செய்தால் தான் உங்கள் குழந்தைகள் விரைவாக தனியாக தூங்குவதற்கு பழகுவார்கள்.

Read More : சிக்னல் வந்தாச்சு..!! தமிழகத்தை குளிர்விக்க போகும் மழை..!! கனமழையும் இருக்காம்..!! இன்று முதல் ஆரம்பம்..!!

Advertisement