முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் வீட்டிற்கு காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? வாஸ்து கூறுவது என்ன?

Do you know what it means when a crow comes to your house? What does Vastu mean?
06:31 AM Nov 29, 2024 IST | Mari Thangam
Advertisement

காகங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். நம் வீட்டில் காகம் வந்து கூவினால் பலவிதமான காரியங்கள் நடக்கும் என்று நம் பெரியவர்கள் சொல்வார்கள்.காகம் நம் வீட்டிற்கு வந்தால் பலவிதமான அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் என்ன தெரியுமா? மேலும் காகம் தரும் சிக்னல் நல்லதோ கெட்டதோ என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisement

சுப காரியத்திற்கோ அல்லது வேலை காரணாமாக செல்வதற்கு முன் வீட்டில் இருந்து மேற்கு நோக்கி காகங்கள் பறந்தால், நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயோ அல்லது வீட்டிற்கு முன்னோ, காகங்கள் ஒன்று கூடி கூச்சலிட்டாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாம். மேலும் காகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி காலை வேளையில் உங்கள் வீட்டு முன் பறந்தால், உங்கள் வீட்டிற்கு நெருங்கியவர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. நாம் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவு கொடுப்பதை கண்டால், அந்த பயணம் சிறப்பாக அமையும்.

உங்கள் வீட்டின் தெற்கு பக்கத்தில் காகம் அமர்ந்தால், அது அபாயகரமான அறிகுறியாகும். காகம் வந்து வீட்டில் உணவேதும் சாப்பிட்டால் அது உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது என்பதை உணர்த்துகிறது என்று அர்த்தமாம். மேலும் காகம் கூடு கட்டும் குச்சி போன்ற பொருட்களை உங்கள் வீட்டில் போட்டுவிட்டு போனால், அந்த வீட்டில் லட்சுமி அருள் நிறைந்த பெண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறியாகுமாம்.

Read more ; வேலைக்கு செல்லும் பெற்றோர்களே கவனம்!! வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

Tags :
CrowVastu
Advertisement
Next Article